தக்காளி இல்லாமல் வித்தியாசமான சுவையில் இந்த சட்னியை சமைத்து பாருங்க., டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!!

0
தக்காளி இல்லாமல் வித்தியாசமான சுவையில் இந்த சட்னியை சமைத்து பாருங்க., டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!!

பொதுவாக இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி தான் தயார் செய்வோம். ஆனால் தற்போது தக்காளி விலை அதிகரித்து இருப்பதால் தினமும் தேங்காய் சனியை மட்டும் தான் சமைக்க முடிகிறது. இதனால் ஒரு வித்தியாசமான சுவையில் தக்காளி இல்லாமல் ஒரு சூப்பரான சட்னி தயாரிப்பது என்பதை என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்;

  • சின்ன வெங்காயம் – 10
  • வெள்ளை பூண்டு – 4 பல்
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • புளி – சிறுதுளவு
  • பொட்டுக்கடலை – 3 டீஸ்பூன்
  • தேங்காய் துருவல் – 1 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • கடுகு, உளுந்தம் பருப்பு – சிறிதளவு
  • எண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

தக்காளி இல்லாமல் சுவையான பொட்டுக்கடலை சட்னி தயாரிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். பின் அதில் மிளகாய் வத்தல், சின்ன வெங்காயம், வெள்ளை பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

மின்வாரிய ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்., பரபரப்பான சூழ்நிலையில் ஆந்திர அரசு!!!

பிறகு அதோடு துருவிய தேங்காய் பொட்டுக்கடலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி கொள்ளவும். இப்போது இவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும். பிறகு கடாயில் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து சட்னியில் ஊற்றி கொள்ளவும். இப்போது நமக்கு தக்காளி போடாத சுவையான பொட்டுக்கடலை சட்னி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here