ஹரியாலி சிக்கன் கிரேவி சாப்பிட்டுருப்பீங்க.,ஆனா சிக்கன் 65 சாப்பிட்டிருக்கீங்களா.., இதோ உங்களுக்காக!!

0
ஹரியாலி சிக்கன் கிரேவி சாப்பிட்டுருப்பீங்க.,ஆனா சிக்கன் 65 சாப்பிட்டிருக்கீங்களா.., இதோ உங்களுக்காக!!
ஹரியாலி சிக்கன் கிரேவி சாப்பிட்டுருப்பீங்க.,ஆனா சிக்கன் 65 சாப்பிட்டிருக்கீங்களா.., இதோ உங்களுக்காக!!

நாம் எப்பவும் சிக்கன் 65 ரெசிபி செய்வதற்கு சிக்கன் மசாலா தான் பயன்படுத்தி இருப்போம். ஆனா இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக ஹரியாலி சிக்கன் 65 ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
  • சிக்கன் லெக் பீஸ் – 1/2 கிலோ
  • புதினா கொத்தமல்லி – 100 கிராம்
  • மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 3
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • ரீபன்ட் ஆயில் – 250 கிராம்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  • முட்டை – 1

செய்முறை விளக்கம்:

ஹரியாலி சிக்கன் 65 ரெசிபி செய்வதற்கு, ஒரு பவுலில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை போட்டு, அத்துடன் ஒரு முட்டையை சேர்த்துக் கொள்ளவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி அளவு புதினா, மல்லி இலை, அதோடு 3 பச்சை மிளகாய் , இஞ்சி, பூண்டு சேர்த்து பேஸ்டாக அரைத்து சிக்கனுடன் மிக்ஸ் செய்து கொள்ளவும்.

பிறகு அதில் மிளகு தூள், மல்லி தூள், உப்பு சேர்ந்து சிக்கனுடன் மசாலா நன்றாக சேரும் அளவுக்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஆயிலை ஊற்றவும். ஆயில் கொதித்தவுடன் அதில் சிக்கனை போட்டு நன்றாக ப்ரை செய்து எடுத்துக்கொள்ளவும். பின் சுவையான இந்த ஹரியாலி சிக்கன் 65 யை வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here