CSK vs GT: காயத்திற்கு உள்ளான தோனி முதல் போட்டியில் களமிறங்குவாரா?? பதில் அளித்த தலைமை அதிகாரி!!

0
CSK vs GT: காயத்திற்கு உள்ளான தோனி முதல் போட்டியில் களமிறங்குவாரா?? பதில் அளித்த தலைமை அதிகாரி!!
CSK vs GT: காயத்திற்கு உள்ளான தோனி முதல் போட்டியில் களமிறங்குவாரா?? பதில் அளித்த தலைமை அதிகாரி!!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில், CSK அணியின் கேப்டன் தோனி களமிறங்குவது கேள்விக்குறியான நிலையில், CSK யின் தலைமை அதிகாரி அதற்கு பதில் அளித்துள்ளார்.

தோனி:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16 வது சீசன் இன்று முதல் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இருந்து தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில், 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த போட்டிக்கு சென்னையில் உள்ள சேப்பாக்க மைதானத்தில் தயாரானபோது CSK அணியின் கேப்டன் தோனி, முழங்கால் பகுதியில் காயம் அடைந்தார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக சென்னையில் இருந்து CSK அணியினர் சமீபத்தில், அகமதாபாத்துக்கு வந்தடைந்தனர். இங்கு தனது பயிற்சியை தொடங்கிய CSK வீரர்களில் தோனி பயிற்சி செய்யவில்லை என தகவல் வெளியானது.

முதல்வரின் காலை உணவு திட்டம் – 1 கோடி செலவில் மகளிருக்கு சமையல் செய்முறை பயிற்சி – அமைச்சர் உதயநிதி அறிவிப்பு!!

இதனால், இவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகாததால் தான் பயிற்சியில் ஈடுபட வில்லை. மேலும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கு பெறுவது சந்தேகம் எனவும் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், CSK அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான காசி விஸ்வநாதன், தோனி முழு உடல் தகுதியுடன் உள்ளார். என்னை பொறுத்த வரையில், தோனி கண்டிப்பாக களத்தில் இறங்குவார் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here