தமிழக புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்லூரிகளில் குவிந்த அட்மிஷன்.., வெளியான  அறிக்கை!

0
தமிழக புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்லூரிகளில் குவிந்த அட்மிஷன்.., வெளியான  அறிக்கை!
தமிழக புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்லூரிகளில் குவிந்த அட்மிஷன்.., வெளியான  அறிக்கை!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் குடும்ப சூழ்நிலை கருதி உயர்கல்வி பயிலாமல் கிடைத்த வேலைக்கு செல்ல தொடங்கி விடுகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர்களுக்கு நிதி பிரச்சினை ஒரு சுமையாக இருக்க கூடாது என “புதுமைப்பெண்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பிற்காக மாதந்தோறும் ரூ.1,000 அவரது வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 1.13 லட்சம் மாணவிகள் பயணடைந்து வரும் வேளையில் 2ம் கட்ட செயல்பாடுகளையும் அண்மையில் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

CSK vs GT: காயத்திற்கு உள்ளான தோனி முதல் போட்டியில் களமிறங்குவாரா?? பதில் அளித்த தலைமை அதிகாரி!!

இதன் மூலம் கூடுதலாக 1.04 லட்சம் மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதால் கல்லூரிகளில் சேர்க்கை விகிதம் கடந்த ஆண்டை விட 29 சதவீதம் உயர்ந்துள்ளதாக இன்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஏழை எளியவர்களின் கல்வி படிப்பு தடைபடாமல் தொடர்வதால் இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here