முதல்வரின் காலை உணவு திட்டம் – 1 கோடி செலவில் மகளிருக்கு சமையல் செய்முறை பயிற்சி – அமைச்சர் உதயநிதி அறிவிப்பு!!

0
முதல்வரின் காலை உணவு திட்டம் - 1 கோடி செலவில் மகளிருக்கு சமையல் செய்முறை பயிற்சி - அமைச்சர் உதயநிதி அறிவிப்பு!!
முதல்வரின் காலை உணவு திட்டம் - 1 கோடி செலவில் மகளிருக்கு சமையல் செய்முறை பயிற்சி - அமைச்சர் உதயநிதி அறிவிப்பு!!

தமிழக சட்டசபையில் வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறை தொடர்பாக அமைச்சர் உதயநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை:

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் சட்டப்பேரவை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பல அமைச்சர்கள் தங்களுடைய வாதங்களையும் அறிக்கைகளையும் முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறை தொடர்பாக சட்டசபையில் பேசியுள்ளார். மேலும் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு,

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

கிராமத்தில் வாழும் இளைஞர்களுக்கு 20 ஆயிரம் பேருக்கு செயல் திறன் அளிக்க ரூ.120 கோடி செலவில் பயிற்சி கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி ரூ.25 கோடி செலவில் 25 ஆயிரம் பேருக்கு சுய தொழிலை ஊக்குவிக்கும் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

படம் பார்க்க நரிக்குறவருக்கு அனுமதி மறுப்பு..,மனிதநேயமற்ற ரோகிணி தியேட்டரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த கமல்ஹாசன்!!

  • ரூ.1,50,000 வீதம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் 5000 சுய உதவிக்குழுக்களுக்கு 75 கோடி மதிப்பில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.
  • அந்த சுய உதவிக் குழுக்கள் நடத்தும் 7500 நுண் மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், 50 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்.
  • ரூ.9 கோடியே 48 லட்சம் செலவில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து சுய உதவிக்குழுக்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும்.
  • ரூ.7 கோடியே 34 லட்சம் செலவில் கொத்தடிமை தொழிலாளர்களின் மறுவாழ்வு அமைக்கப்படும்.
  • ரூ.5 கோடி செலவில் சுய உதவிக்குழுக்களின் பொருட்கள் விற்க, 100 முக்கிய சுற்றுலா தலங்களில் மதி அங்காடி’ அமைக்கப்படும்.
  • ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் ‘‘வானவில் மையம்’’ எனும் பாலின வள மையம் 37
    மாவட்டங்களிலும் முன்மாதிரியாக அமைக்கப்படும்.
  • மகளிர் குழுக்கள் சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு 37 மாவட்ட பெருந்திட்ட வளாகங்களில் ‘சிறுதானிய உணவகங்கள்’’ நடத்திட ரூ.1 கோடியே 85 லட்சம் வழங்கப்படும்.
  • தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த சுய உதவிக் குழுவினருக்கு 1 கோடி ரூபாய் செலவில் சமையல் செய்யும் முறை பயிற்சி அளிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here