ஐபிஎல் போட்டிக்காக சென்னைக்கு விரைந்த தல தோனி – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்காக பயிற்சி எடுக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் தற்போதைய கேப்டனுமான தோனி தற்போது சென்னை வந்துள்ளார்.

தோனி:

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்தியாவில் இன்னும் ஒரு சில மாதங்களில் 14வது ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது இந்த தொடருக்கான மினி ஏலம் கடந்த மாதமே முடிந்தது. ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேலும் லீக் சுற்றுலேயே சிஎஸ்கே அணி வெளியேறியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் தோனி மீது பெரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டிக்காக பயிற்சி எடுப்பதற்கு தற்போது தோனி சென்னை வந்துள்ளார்.

#INDvsENG 4 வது டெஸ்ட் – மதிய உணவு இடைவேளையில் இங்கிலாந்து 74 – 3!!

இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரைத்தொடர்ந்து இன்னும் சில நாட்களில் சிஎஸ்கே அணியின் அம்பதி ராயுடு, உத்தப்பா போன்றவர்கள் பயிற்சியில் இனையவுள்ளனர். தற்போது தோனி சென்னை வந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here