ஓணம் ஸ்பெஷலாக தன் கவர்ச்சி பாணியில் வாழ்த்து சொன்ன குக் வித் கோமாளி தர்ஷா – ஜொள்ளு ஊற்றிய ரசிகர்கள்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான தர்ஷா குப்தா தற்போது ஓணம் ஸ்பெஷலாக கையில் தீபம் ஏந்தி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி தர்ஷா

ஜீ தமிழில் வெளியான முள்ளும் மலரும் சீரியலில் நாயகியாக நடித்ததன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் தர்ஷா குப்தா. அதன் பிறகு இவருக்கு வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை. ஆனால் பல ஷார்ட் பிலிம்களில் நடித்து கொண்டு தான் இருந்தார்.

ஆனாலும் இவருக்கென்று எந்த அடையாளமும் கிடைக்கவில்லை. அதன் பிறகு தான் இவர் விஜய் டிவியில் செந்தூர பூவே சீரியலில் வில்லியாக அறிமுகமானார். மேலும் குக்வித் கோமாளி சீசன் 2விலும் அவருக்கு பங்குபெற வாய்ப்பு கிடைத்தது. தனது சமையல் திறமையால் அனைவரின் மத்தியிலும் இடம் பிடித்தார்.

ஒரு சீசனிலேயே அவருக்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. மேலும் போட்டோஷூட் வேறு அவருக்கு கைகொடுக்க தற்போது சதிஷ் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அதில் சன்னி லியோனும் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. ஓவர் நைட்டில் ஒபாமா ஆன கதை தான் தர்ஷாவிற்கு.

தற்போது வரை மக்கள் மத்தியில் அதிக வரவேற்புள்ள ஆளாக இருந்து வருகிறார். லாக்டவுன் சமயத்தில் இல்லாதவர்களுக்கு உதவி செய்வது போன்ற குணங்கள் அனைவரையும் ஈர்த்தது.

இந்நிலையில் தான் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ஓணம் வாழ்த்துக்களை தெரிவிக்க கையில் தீபம் ஏந்தி அந்த வெளிச்சத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here