விஜயுடன் நேருக்கு நேர் மோத ரெடியான பிரபல நடிகர்… லியோவுக்கே ஸ்கெட்ச் போட்ட ஆக்சன் திரைப்படம்!!

0
விஜயுடன் நேருக்கு நேர் மோத ரெடியான பிரபல நடிகர்... லியோவுக்கே ஸ்கெட்ச் போட்ட ஆக்சன் திரைப்படம்!!
விஜயுடன் நேருக்கு நேர் மோத ரெடியான பிரபல நடிகர்... லியோவுக்கே ஸ்கெட்ச் போட்ட ஆக்சன் திரைப்படம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் தளபதி-யை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் ஏகப்பட்ட நட்சத்திரங்களை களமிறக்கியுள்ளார் லோகேஷ். இதனால் படத்தோட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தளபதி பிறந்த நாளுக்குள் ஷூட்டிங்கை முடிக்க படக்குழுவினர் முனைப்புடன் இருந்து வருகிறது. மேலும் இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக இருக்கும் நேரத்தில் இப்படத்திற்கு எதிராக ஒரு திரைப்படம் வெளியாக இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தில் இது இருக்காது?? மொத்த ஒதுக்கீடு இவ்வளவு தான்!!

அதாவது, நடிகர் தனுஷ் நடிப்பில் ஆக்சன் படமா க உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இப்படத்தை வருகிற தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தீபாவளி அன்று சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும், கார்த்திக் நடித்த ஜப்பான் திரைப்படம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா 2 உள்ளிட்ட படங்கள் வெளியாக இருப்பதால், கேப்டன் மில்லர் படத்திற்கு தியேட்டர் கம்மியாக வாய்ப்பு இருக்கிறது. இதனால் அக்டோபர் மாதம் படத்தை வெளியிடலாம் என்று படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here