அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர்…, சாதனை பட்டியலில் இணைந்து அபாரம்!!

0
அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர்..., சாதனை பட்டியலில் இணைந்து அபாரம்!!
அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர்..., சாதனை பட்டியலில் இணைந்து அபாரம்!!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணியின் டேவன் கான்வே 1000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார்.

டேவன் கான்வே:

பாகிஸ்தான் அணியானது, சமீபத்தில் தனது சொந்த மண்ணில் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை கடுமையாக போராடி இழந்தது. இதனை தொடர்ந்து, நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியானது, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், முதல் டெஸ்ட் போட்டியானது, கடந்த 26ம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 438 ரன்களுக்குள் சுருண்டது. இதில், பாபர் அசாம் (161), ஆகா சல்மான் (103) ரன்கள் எடுத்தனர். இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

தோனியின் மகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசு வழங்கிய மெஸ்ஸி…, மகிழ்ச்சியை பகிர்ந்த ஜீவா சிங்!!

இந்த போட்டியில், நியூசிலாந்தின் டேவன் கான்வே 14 பவுண்டரிகளை விளாசி 92 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம், சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜான் ஃபுல்டன் ரீட்டின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது, ஜான் ஃபுல்டன் ரீட் 20 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்திருந்தார். தற்போது, டேவன் கான்வே 19 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து முதல் நியூசிலாந்து வீரரானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here