பொதுவாகவே ஒவ்வொரு வட்டாரத்திற்கும் பெயர் போன சில சமையல் வகைகள் உண்டு. தற்போது இந்த பதிவில் நாகர்கோவிலின் பேமஸான பருப்பு கறி எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
மறைக்க வேண்டியதை மறைக்காமல் போஸ் கொடுத்த அனு இம்மானுவேல் – ஜூம் செய்து ரசித்த ரசிகர்கள்!!!
தேவையான பொருட்கள்:
து. பருப்பு – 1 கப்
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 2
தேங்காய் துருவல் – 1 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
ப. மிளகாய் – 3
கடுகு – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிது
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – தே.அளவு
உப்பு – தே.அளவு
செய்முறை:
குக்கரில் பருப்பு, நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வரும் வரை வேகவிடவும்.இப்போது தேங்காய் துருவல், சீரகத்தை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
இப்போது பருப்புடன் அரைத்த தேங்காய் கலவை சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை விட்டு பொரிந்ததும் பெருங்காயம் சேர்த்து பருப்பு கலவையை அதில் ஊற்றி கொதிக்க விடவும்.
பின்னர் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும். தற்போது சூடான சுவையான நாகர்கோவில் ஸ்டைல் பருப்பு கறி தயார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்