அனைவரையும் கவர்ந்த அய்யனார் – டெல்லி குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழகம்..!

0

இன்று நமது இந்திய நாட்டின் (ஜனவரி 26) 71வது குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து , முப்படைகளின் பிரமாண்ட அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். அய்யனார் சிலையுடன் வந்த தமிழக ஊர்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

சினூக் மற்றும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், விமானப்படைக்கு புதிதாக வாங்கப்பட்ட ரபேல் போர் விமானம் போன்றவைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. ருத்ரா, துருவ் போன்ற அதிநவீன ஹெலிகாப்டர்களும், டிஆர்டிஓ சார்பில் எதிரிகளின் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கக் கூடிய சக்தி ஏவுகணையும் அணிவகுப்பில் இடம்பெற்றது.

பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்ற ஊர்திகள் அணிவகுத்து வந்தன. தமிழகத்தின் சார்பில் காவல் தெய்வமாக கருதப்படும் அய்யனார் சிலை காட்சிப்படுத்தப்பட்டது. தமிழகத்தின் பாரம்பரிய இசை, நடனம் என அணிவகுத்து வந்த தமிழக ஊர்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here