இந்தியாவின் 71வது குடியரசு தினவிழா – ஜனாதிபதி, பிரதமர் கொடியேற்றத்துடன் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன..!

0

இன்று நமது இந்திய நாட்டின் (ஜனவரி 26) 71வது குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி டெல்லியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து , முப்படைகளின் பிரமாண்ட அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். 

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர இங்கே கிளிக் செய்யவும்

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது இதுவரை டில்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் மட்மே மரியாதை செலுத்தப்பட்டு வந்தது. இதனை மாற்றி, முதல் முறையாக தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பத்ம விருதுகள்..!

குடியரசு தினவிழாவை முன்னிட்டு பல தலைவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.  இந்தியாவின் 2-வது மிகப்பெரும் கவுரவ விருதான  பத்ம விபூஷன் விருதுகள் முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு மறைவுக்கு பின்னர் வழங்கப்படுகின்றன.  7 பத்ம விபூஷன், 16 பத்ம பூஷன், 118 பத்ம ஸ்ரீ விருதுகள் இந்தாண்டு வழங்கப்படவுள்ளது. அவர்களில் 34 பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for telegram logo

டெலிகிராம் சேனலில் சேர இங்கே கிளிக் செய்யவும்

பத்ம பூசன் விருது பெறுபவர்கள்

உயர்மட்ட அளவில் சிறப்பான சேவை செய்தமைக்காக பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது.  பேட்மின்ட்டன் வீராங்கனை பி.வி..சிந்து, தொழில் அதிபர்கள் ஆனந்த் மகேந்திரா, வேனு ஸ்ரீனிவாசன், முன்னாள் நாகலாந்து முதல்வர் எஸ்.சி. ஜமீர், ஜம்மு காஷ்மீர் அரசியல்வாதி முசாபர் உசைன் பேக் ஆகியோர் இந்த ஆண்டு பெறுகின்றனர்.

பத்ம விபூஷண் விருது பெறுபவர்கள்

தன்னிகரற்ற சிறப்பான சேவையை நாட்டுக்கு வழங்கியமைக்காக பத்ம விபூஷன் விருது வழங்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மேரி கோம், பிரபல பாடகர் சன்னுலால் மிஷ்ரா, மொரீஷியஸ் பிரதமர் அனிரூத் குகநாத் ஆகியோர் இந்த ஆண்டு பெறுகின்றனர்.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பத்ம ஸ்ரீ விருது பெறுபவர்கள்

தங்களது துறைகளில் சிறப்பானை சேவை வழங்கியதற்காக பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.  பின்னணி பாடகர் சுரேஷ் வட்கார், யக்குனர் கரன் ஜோகர், நடிகை கங்கனா ரணாவத், Naukri.com நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தானி, தொழில் அதிபர் பாரத் கோயங்கா, தொழில்நுட்ப வல்லுனர் நேம்நாத் ஜெய்ன் ஆகியோர் இந்த ஆண்டு பெறுகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here