குடியரசு தினம் – சென்னையில் கோலாகல கொண்டாட்டம், விருதுகள் வழங்கப்பட்டது..!

0

இந்திய நாட்டின் 71வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  இதையொட்டி தமிழ்நாட்டில் சென்னையில் ஆளுநர் மெரினா காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகே இன்று காலை 8 மணிக்கு தேசியக்கொடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றினார். குடியரசு தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு குடியரசு தின விருதுகள்..!

காந்தியடிகர் காவலர் பதக்கம் – திருப்பூர் காவல் ஆய்வாளர் சந்திரமோகன்

கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது – மு. சாஜ் முகமது

வீர தீர செயலுக்கான அண்ணா விருது – தீயணைப்புப்படை ஓட்டுநர் ராஜா

 மற்றும் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறை சிறப்பு விருது ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

அணிவகுப்பு மரியாதை

விமானப்படை, கப்பல் படை, தரைப்படை வீரர்கள், ஆண் மற்றும் பெண் போலீசார், கமாண்டோ போலீசார், தீயணைப்பு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், என்சிசி மாணவர்கள் உள்ளிட்ட 48 படை  பிரிவினரின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹத் ஏற்றார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here