‘டியர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்….,கத பிரமாதமா இருக்கும் போலயே….,

0
'டியர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்....,கத பிரமாதமா இருக்கும் போலயே....,
'டியர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்....,கத பிரமாதமா இருக்கும் போலயே....,

‘சேதம் ஆயிரம் பொன்’ என்ற படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் தற்போது ‘டியர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில், பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இவர்களுடன், இப்படத்தில் தலைவாசல் விஜய், காளி வெங்கட், இளவரசு, ரோகினி, கீதா கைலாசம், நந்தினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்போது, ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா நடிக்கும் ‘டியர்’ திரைப்படத்திற்கான ஃபர்ட்ஸ் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

‘நாயகன் மீண்டும் வரார்’…..,திரைக்கு வரும் தல தோனியின் பயோபிக் திரைப்படம்….,

இந்த மோஷன் போஸ்டரில், நடிகை ஐஸ்வர்யா தீபிகாவாகவும், ஜி.வி.பிரகாஷ் அர்ஜுன் என்ற கதாப்பாத்திரத்திலும் கணவன், மனைவியாக இருக்கின்றனர். அந்த வகையில், ஐஸ்வர்யா வழக்கத்திற்கு மாறாக அதிக சத்தத்துடன் குறட்டை விடுவது போலவும், இதனால் ஜிவி பிரகாஷ் கடுப்பாவது போலவும் காட்சி ஒன்று இடம்பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here