வா…டிக்டாக்கில் டூயட் பாடலாம் – விராட் கோஹ்லியை அழைக்கும் வார்னர்..!

0
17

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இந்திய கேப்டன் விராட் கோஹ்லியை டிக்டாக் உலகிற்கு அழைத்து உள்ளார். உங்களுக்கு அக்கௌன்ட் ரெடி செய்து தர உங்கள் மனைவி உதவுவார் என காமெடியாக தெரிவித்து உள்ளார்.

டிக்டாக் வார்னர்:

கொரோனா தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் எவ்வித விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் விளையாட்டு நட்சத்திரங்கள் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இதில் வித்தியாசமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் வார்னர் அவரது குடும்பத்துடன் டிக்டாக்கில் இறங்கி விட்டார். தனது மனைவி, மகள் மற்றும் தாய் என அனைவருடனும் இவர் சேர்ந்து செய்யும் டிக்டாக் விடியோக்கள் கோடிக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

இந்திய திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார் வார்னர். அதற்கு லைக்குகளும், கமெண்ட்டுகளும் அள்ளின. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும் தன் பங்கிற்கு சிரிப்பது போன்ற எமோஜியை கமெண்ட் செய்திருந்தார். அதற்க்கு ரிப்ளை செய்த வார்னர் நீங்களும் டிக்டாக்கில் என்னுடன் டூயட் பாட வாருங்கள் என அழைத்துள்ளார். அதற்கான உங்களது டிக்டாக் அக்கவுண்ட்டை உங்கள் மனைவி தயார் செய்து கொடுப்பார் எனவும் நகைச்சுவையாக பதிவிட்டு உள்ளார்.

33 வயதான இடதுகை பேட்ஸ்மேன் வார்னர் ஐபிஎல் தொடரில் சன் ரைசெர்ஸ் அணியின் கேப்டன் ஆக களமிறங்க இருந்த நிலையில் காலவறையின்றி ஐபிஎல் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு விட்டது. இதனால் முழுவதுமாக தன் கவனத்தை டிக்டாக் பக்கம் திருப்பியுள்ள வார்னர் லைக்குகளை அள்ளி வருகிறார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here