கணவருடைய பிறந்த நாளை கொண்டாடும் குக் வித் கோமாளி கனி…!வாழ்த்துக்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி மூலம் மக்கள் முன் தோன்றியவர் கனி அவர்கள். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரின் கணவரும் திரைப்பட இயக்குனருமான திரு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளார். இதனையடுத்து அவரின் ரசிகர்களும் கமெண்டுகள் மூலம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றவர் தான் கனி அவர்கள். இவர் இதற்கு முன்பு சொல் விளையாட்டு என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக இருந்து உள்ளார். மேலும் ஒரு சில டிவி நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகவும் இருந்து உள்ளார். அதன் பிறகு குக் வித் கோமாளி சீசன் 2 என்ற நிகழ்ச்சியில் நுழைந்து அங்கு தரப்படும் அனைத்து சவால்களையும் திறமையாக கையாண்டு முதல் இடத்தையும் தட்டி சென்று உள்ளார். மேலும் இவர் யூ-டியூப் சேனல்  ஒன்றையும் நடத்தி வருகிறார்.

மேலும் இவர் இயக்குனர் திருவின் மனைவி ஆவார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர் திரைத்துறையை  பின்னணியாக கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் ஆவர். இவரின் கணவர்  திரு , தீராத விளையாட்டு பிள்ளை, சமர் போன்ற படங்களை இயக்கி உள்ளார். இந்நிலையில் இயக்குனர் திரு அவர்கள் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையடுத்து கனி அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய கணவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த பதிவை பார்த்த அவரின் ரசிகர்களும் இயக்குனர் திருவிற்கு தங்களின் கமெண்டுகள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here