அவர்கள் இருந்தால் என்ன ? செத்தா என்ன ? – அரசு மருத்துவர் செவிலியர் உரையாடல் வெளியானதால் பரபரப்பு!!!

0
அரசு மருத்துவர் செவிலியர் உரையாடல் வெளியானது - அவர்கள் இருந்த என்ன ? செத்தா என்ன ?
அரசு மருத்துவர் செவிலியர் உரையாடல் வெளியானது - அவர்கள் இருந்த என்ன ? செத்தா என்ன ?

அரசு மருத்துவமனை உயர் அதிகாரி செவிலியரிடம் நோயாளிகளை பற்றி அவதூறாக பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நோயாளிகள் உயிரோடு இருந்தால் என்ன? செத்தா நமக்கு என என்று போனில் கேட்டுள்ளார், அவர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர் செவிலியரிடம் நோயாளி பற்றி பேசிய ஆடியோ…

சிவகங்கை இளையான்குடியை பகுதியில் உள்ள வடக்கு கீரனுர் கிராமத்தை சேர்ந்த துரைராஜின் மகன் கார்த்திக். இவருக்கு 22 வயது ஆகிறது. இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் உடல் நலக்குறைவால் சிவகங்கை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர். இரண்டு மூன்று நாட்களுக்கு பின் அவருக்கு திடிரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக செவிலியரை அழைத்து கூறியுள்ளார். அதற்க்கு செவிலியர் உடனே நீங்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று மேல் சிகிச்சை இருங்கள் என்று கூறியுள்ளார்.

மருத்துவர் செவிலியரிடம் நோயாளி பற்றி பேசிய ஆடியோ...
மருத்துவர் செவிலியரிடம் நோயாளி பற்றி பேசிய ஆடியோ…

இதனைத்தொடர்ந்து கார்த்திக்கின் உறவினர்கள் இதைப்பற்றி மருத்துவமனையின் உயர் அதிகாரியும் மருத்துவருமான மீனாவிடம் புகார் தெரிவித்தனர். அதன்பின் மீனா செவிலியரை போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்பொழுது என் நீங்கள் நோயாளி கார்த்திக்கை தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினீர்கள். நோயாளிகளை நாம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சையாகு மட்டுமே பரிந்துரைக்க வேண்டும். வேறு எதற்கும் ஏதும் சொல்லக்கூடாது. நோயாளிகள் உயிரோடு இருந்தால் என்ன செத்தா நமக்கு என்ன என்று செவிலியரிடம் பேசியுள்ளார், மருத்துவர் மீனா செவிலியரிடம் பேசிய அந்த ஆடியோ கால் வெளியாகியுள்ளது. அவர்களின் உரையாடல் மற்ற நோயாளிகளுக்கும் மக்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here