‘நிஜம் என் கஸ்டடியில்’…..,அதிரடியாக வெளியான ‘கஸ்டடி’ திரைப்பட டீசர்….,

0
'நிஜம் என் கஸ்டடியில்'.....,அதிரடியாக வெளியான 'கஸ்டடி' திரைப்பட டீசர்....,
'நிஜம் என் கஸ்டடியில்'.....,அதிரடியாக வெளியான 'கஸ்டடி' திரைப்பட டீசர்....,

நடிகர் அரவிந்த் சுவாமி மற்றும் நாகசைதன்யா நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘கஸ்டடி’ திரைப்படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

திரைப்பட டீசர் ரிலீஸ்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் நாகசைதன்யாவை வைத்து ‘கஸ்டடி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் வகையாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி, நடிகை கீர்த்தி ஷெட்டி மற்றும் பிரியாமணி உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும், இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இத்திரைப்படம் மே 12 ஆம் தேதியன்று திரைக்கு வர இருக்கிறது. இதற்கு முன்னதாக, ‘கஸ்டடி’ திரைப்படத்திற்கான டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசர் ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகளுடன், ‘காயம் பட்ட இதயம் ஒருவரை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சேர்க்கும். அப்படி தான் இது என்னை போர்க்களத்திற்கு கொண்டு போய் விட்டிருக்கிறது.

ராமரை தொடர்ந்து பிரமாண்ட வீட்டை கட்டிய விஜய் டிவி தீனா.., வைரலாகும் போட்டோஸ்!!

உண்மைக்காக போராடும் ஒருவனை சாவு துரத்துகிறது. நிஜத்தை எவ்வளவு நாள் புதைத்து வைத்தாலும் அது ஒரு நாள் வெளியே வரும். அந்த நிஜம் என் கஸ்டடியில் இருக்கிறது’ போன்ற பஞ்ச் வசனங்களுடன் வெளியாகி இருக்கிறது ‘கஸ்டடி திரைப்படத்திற்கான டீசர். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here