ராமரை தொடர்ந்து பிரமாண்ட வீட்டை கட்டிய விஜய் டிவி தீனா.., வைரலாகும் போட்டோஸ்!!

0

விஜய் டிவி பிரபலம் நடிகர் தீனா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு இன்பமான செய்தியை பகிர்ந்துள்ளார்.

நடிகர் தீனா:

விஜய் டிவி தொலைக்காட்சியில் மக்களுக்கு மிகவும் பிடித்த ஷோ என்றால் அது கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி தான். இந்த ஷோவின் மூலமாக சிவகார்த்திகேயன் முதல் ராம்போ ராமர் வரை வெள்ளி திரைக்கு சென்றுள்ளனர். அதில் ஒருவராக இருந்து வருபவர் தான் KPY தீனா. வெள்ளித்திரையில் இவர் நடித்த பா.பாண்டி, மாஸ்டர், கைதி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றவை.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

படங்கள் மட்டுமின்றி தற்போது விளம்பர படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார் நடிகர் தீனா. இப்படி பிசியாக இருந்து வரும் தீனா தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நடிகர் தீனா தனது ரசிகர்களுக்கு இன்ஸ்டகிராம் பக்கத்தில் இன்பமான செய்தியை பகிர்ந்துள்ளார்.

ச்சீ…, எவ்வளவு காசு கொடுத்தாலும் அந்த வேலையை செய்ய மாட்டேன்.., சரத்குமாரை மறைமுகமாக சாடும் சென்ட்ராயன்!!

அதாவது நடிகர் தீனா தற்போது பல லட்சம் ரூபாயில் சும்மா திருமண மண்டபம் போல், இரண்டு அடுக்கு மாடி வீடு கட்டியுள்ளார் தீனா. இந்த நிலையில் இன்று புது வீட்டில் கிரஹப்பிரவேசம் செய்தபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ராமர் மதுரையில் இதே போல் அடுக்குமாடி வீடு கட்டியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here