‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தின் சிங்கிள் நாளை ரிலீஸ்….,விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்….,

0
'பிச்சைக்காரன் 2' திரைப்படத்தின் சிங்கிள் நாளை ரிலீஸ்....,விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்....,
'பிச்சைக்காரன் 2' திரைப்படத்தின் சிங்கிள் நாளை ரிலீஸ்....,விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்....,

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தின் சிங்கிள் நாளை மாலை ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கிள் ரிலீஸ்

தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக அறியப்படுபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் வெளியான சலீம், பிச்சைக்காரன் போன்ற திரைப்படங்கள் அவரது அழுத்தமான கதாப்பாத்திரங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அந்த வகையில், நடிகர் விஜய் ஆண்டனி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் 2 ஆம் பாகம் இப்போது தயாரிப்பில் இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

‘நிஜம் என் கஸ்டடியில்’…..,அதிரடியாக வெளியான ‘கஸ்டடி’ திரைப்பட டீசர்….,

‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘பிகிலி’ நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here