IPL 2023: CSK vs RR போட்டியில் நிகழ்ந்த சில சாதனை துளிகள்…, லிஸ்ட் இதோ!!

0
IPL 2023: CSK vs RR போட்டியில் நிகழ்ந்த சில சாதனை துளிகள்..., லிஸ்ட் இதோ!!
IPL 2023: CSK vs RR போட்டியில் நிகழ்ந்த சில சாதனை துளிகள்..., லிஸ்ட் இதோ!!

ராஜஸ்தான் மற்றும் CSK அணிக்கு இடையிலான போட்டியில் மூலம் நிகழ்ந்த சாதனைகள் குறித்து இப்பதிவில் காணலாம்.

ஐபிஎல்:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து தனது சொந்த மண்ணில் போட்டியிட்டது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை குவித்திருந்தது. இதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 52, தேவ்தட் படிக்கல் 38 ரன்கள் எடுத்திருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து, 176 ரன்கள் துரத்தி CSK அணி களமிறங்கியது. இந்த போட்டியில், ருதுராஜ் 8 ரன்னில் வெளியேற, டெவோன் கான்வே 50, அஜிங்க்யா ரஹானே 31 என அதிரடியாக விளையாடி பெவிலியன் திரும்பினர். இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள், சொற்ப ரன்களில் வெளியேற, தோனி (32*) மற்றும் ஜடேஜா (25*) வெற்றிக்காக போராடினர். ஆனாலும், CSK அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து, 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ICC: மார்ச் மாதத்திற்கான “player of the month” விருதை தட்டிச் சென்ற வீரர் & வீராங்கனை!!

இந்த போட்டியில், நடந்த சில சாதனை துளிகள்:

  • ராஜஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கிய தோனிக்கு, ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியின் கேப்டனாக 200 வது போட்டியாகும்.
  • இதை போல, இந்த போட்டியில், சஞ்சு சாம்சன் விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஜடேஜா, ஒட்டுமொத்த டி 20 அரங்கில், 296 போட்டிகளில் விளையாடி, 200 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
  • ராஜஸ்தானின் ஜோஸ் பட்லர், CSK அணிக்கு எதிராக 52 ரன்கள் எடுத்ததன் மூலம், ஐபிஎல் அரங்கில், 3000 ரன்னை கடந்துள்ளார். இதுவரை, 86 போட்டிகளில் 3035 ரன்களை எடுத்துள்ளார்.
  • நேற்றைய போட்டியில் டக் அவுட்டான சஞ்சு சாம்சன், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை (8) டக் அவுட்டான வீரரானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here