10வது முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்த CSK…, குஜராத் அணிக்கு எதிராக இத்தனை சாதனையா?? வெளியான புள்ளிவிவரம்!!

0
10வது முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்த CSK..., குஜராத் அணிக்கு எதிராக இத்தனை சாதனையா?? வெளியான புள்ளிவிவரம்!!
10வது முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்த CSK..., குஜராத் அணிக்கு எதிராக இத்தனை சாதனையா?? வெளியான புள்ளிவிவரம்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16 வது சீசனுக்கான முதல் பிளே போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது சொந்த மண்ணில் மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய CSK அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை குவித்திருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 60, டெவோன் கான்வே 40, ஜடேஜா 22 மற்றும் அம்பதி ராயுடு 17 மற்றும் ரஹானே 17 ரன்கள் எடுத்திருந்தனர். 173 ரன்களை சேஸிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி, CSK அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியால், CSK ஐபிஎல் அரங்கில் 10 வது முறையாக இறுதி போட்டிக்கு நுழைந்த அணியாக திகழ்கிறது.

மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஜீவா.., மனோஜ் நிலைமை அதோகதி தான்.., சிறகடிக்க ஆசை புதிய ட்விஸ்ட்!!

இந்த போட்டியில், ருதுராஜ் அரைசதம் அடித்ததன் மூலம் குஜராத் அணிக்கு எதிரான 4 போட்டிகளில் அரைசதம் விளாசிய வீரராக உள்ளார்.

டெத் ஓவரில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களை பட்டியல் CSK வின் மதீஷ் பத்திரன 14 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

மேலும், இந்த போட்டியில் CSK வின் அம்பதி ராயுடு 8 ரன்கள் கடந்த போது ஐபிஎல் அரங்கில் 6000 ரன்களை கடந்த வீரர் ஆனார்.

இதனை தொடர்ந்து, ஜடேஜா இந்த போட்டியில் தசுன் மற்றும் டேவிட் மில்லர் விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் 151 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் ஆனார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here