மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஜீவா.., மனோஜ் நிலைமை அதோகதி தான்.., சிறகடிக்க ஆசை புதிய ட்விஸ்ட்!!

0
மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஜீவா.., மனோஜ் நிலைமை அதோகதி தான்.., சிறகடிக்க ஆசை புதிய ட்விஸ்ட்!!
மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஜீவா.., மனோஜ் நிலைமை அதோகதி தான்.., சிறகடிக்க ஆசை புதிய ட்விஸ்ட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியல், முன்னணி சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. இந்த சீரியலில் மீனா மற்றும் முத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தாலும், மனோஜ்-யை வைத்த முழுவதுமாக கதை நகர்கிறது. அதாவது, இந்த சீரியலின் தொடக்கத்தில் மனோஜ், ஜீவா என்ற பெண்ணை உண்மையாக காதலித்தார்.

ஆனால், ஜீவாவோ மனோஜின் தந்தையிடம் இருந்து வரும் செட்டில் மண்ட் பணத்தை எதிர்பார்த்தே இவரை காதல் செய்வது போல் நடித்தார். இந்த செட்டில் மண்ட் பணத்தை சுருட்ட சரியான நேரம் வரவும், ஜீவா மொத்த பணத்தையும் எடுத்துக் கொண்டு கனடாவுக்கு பறந்து விட்டார். இதனால், ஏமாந்து போன மனோஜ் சில நாட்கள் சோற்றுக்கே வழியின்றி திரிய, ஒரு கட்டத்தில் அவரது தாயின் மூலம் மீண்டும் வீட்டுக்கே அழைத்து வரப்பட்டார். ஆனால், மனோஜ் குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த செட்டில் மண்ட் பணத்தை திரும்பி தந்து விடுவதாக தனது தாயின் மீது சத்தியம் செய்ததால் தான் வீட்டில் அனுமதிக்கப்பட்டார்.

என்னது., விடாமுயற்சி படத்திலிருந்து அஜித் விலகிறாரா? வெளியான ஷாக் தகவல்!!

இதற்கிடையில், ஒரு விபத்தினால் ரோகிணி என்ற பெண்ணின் அறிமுகம் மனோஜுக்கு கிடைத்தது. இந்த பெண்ணுக்கு மனோஜ்ஜை பிடித்துப் போக, தனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருப்பதே மறைத்து மனோஜ்ஜை திருமணம் செய்துள்ளவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், மனோஜ் தனது முன்னாள் காதலியான ஜீவாவை எதிர்பாராத விதமாக சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் இனி வரும் கதைகளில் வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு சந்தித்தால், ஜீவாவிடம் இருந்து பணத்தை மீட்டு தனது சத்தியத்தை நிரைவேர்த்துவாரா?? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here