டெல்லி அணிக்கு இப்படி ஒரு லக் வேற இருக்கா?? அப்போ CSK யின் பிளே ஆப் கனவு பலிக்குமா??

0
டெல்லி அணிக்கு இப்படி ஒரு லக் வேற இருக்கா?? அப்போ CSK யின் பிளே ஆப் கனவு பலிக்குமா??
டெல்லி அணிக்கு இப்படி ஒரு லக் வேற இருக்கா?? அப்போ CSK யின் பிளே ஆப் கனவு பலிக்குமா??

இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடருக்கான திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், பங்கு பெற்ற 10 அணிகளும் தலா 13 போட்டிகளில் விளையாடி முடிந்த நிலையில், பிளே ஆப் சுற்றுக்கான ரேஸ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை குஜராத் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், மீதமுள்ள 3 இடத்திற்கு கடுமையாக போட்டி நடைபெறுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியானது நாளை (மே 20) டெல்லி அணியை எதிர்த்து அருண் ஜெட்லி மைதானத்தில் மோத உள்ளது. இந்த போட்டியில் CSK அணி வென்றால், பிளே ஆப் சுற்றுக்கு மற்ற அணிகளின் வெற்றியை தோல்வியை பார்க்காமல் நேரடியாக முன்னேறும். இதனால், டெல்லி அணிக்கு எதிரான போட்டி CSKக்கு மிக முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது.

பொது தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு.., அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

இந்த போட்டியானது, நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி விளையாட உள்ள கடைசி லீக் போட்டி என்பதால், CSK அணிக்கு எதிராக சிறப்பு ரெயின்போ ஜெர்சி அணிந்து விளையாடவுள்ளது. இதற்கு முந்தைய சீசன்களிலும் டெல்லி அணி இது போல தான் மாற்று ஜெர்சி அணிந்து விளையாடியது. இதில், 2020ல் RCB அணியையும், 2021ல் மும்பை இந்தியன்ஸ் அணியையும், 2022ல் KKR அணியையும் வீழ்த்தியது. தற்போது, CSK அணிக்கு எதிராக இந்த ஜெர்சி அணிந்து விளையாட டெல்லி அணி விளையாட உள்ளதால் லக் யார் பக்கம் இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here