உலக கோப்பையில் களமிறங்கிய தோனி…, வைரலாகும் புகைப்படம்!!

0
உலக கோப்பையில் களமிறங்கிய தோனி..., வைரலாகும் புகைப்படம்!!
உலக கோப்பையில் களமிறங்கிய தோனி..., வைரலாகும் புகைப்படம்!!

பிரேசில் மற்றும் செர்பியா அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை போட்டியில், CSK தோனியின் ரசிகர் செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது.

எங்கும் தோனி:

FIFA உலக கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றுகள் அனைத்தும் கத்தாரில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில், இன்று குரூப் G யில் இடம்பெற்றுள்ள பிரேசில் அணிக்கு எதிராக செர்பியா அணி மோதியது. இந்த போட்டியில், முதல் ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதற்கு இடையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் ஒருவர், பிரேசில் அணியின் ரசிகருக்கு, CSK தோனியின் பெயர் உள்ள மஞ்சள் ஜெர்ஸியை பரிசாக அளித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த, CSK ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர்.

தோனி பாணியில் ஹர்திக் பாண்டியா…, அப்போ அடுத்த உலக கோப்பை நமக்கு தானா??

இதனை, “எங்கு சென்றாலும் மஞ்சள் படை” தான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர். இதற்கு முன், விராட் கோஹ்லி எங்கு பார்த்தாலும் இவர் தான் என தோனியை குறிப்பிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலக கோப்பை போட்டியில், மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்த பிரேசில் அணி, ரிச்சர்லிசன் இரு கோல்களால் (2-0) செர்பியா வீழ்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here