Friday, April 26, 2024

விவசாயிகள் தான் நமது நாட்டின் உயிரோட்டம் – பிறந்தநாள் பதிவாக யுவராஜ் ட்வீட்!!

Must Read

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை அடுத்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக குரல் கொடுத்துள்ளார். அதே போல் தனது தந்தை யோகராஜ் கருத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்:

இந்திய கிரிக்கெட் அணி இரண்டு முறை உலக கோப்பையினை வென்றதற்கு பல வீரர்கள் தங்களது உழைப்பினை கொடுத்துள்ளனர். அப்படி உலக கோப்பையின் போது திறமையாக விளையாடியவர், யுவராஜ் சிங். அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளார். இவர் இன்று தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்தநாள் கொண்டாட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளுக்கான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “பிறந்தநாள் என்பது நமது விருப்பமான அல்லது பிடித்தமானவற்றை பூர்த்தி செய்து கொள்ளும் விதமான நாளாக உள்ளது. இந்த முறை எந்த வழக்கமான பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு மாறாக விவசாயிகளுக்கும் மத்திய அரசிற்கும் இடையே நடத்தப்படும் போராட்டம் சுமூகமான நிலையினை அடைய வேண்டும் என்று பிராத்தனை செய்துகொள்கிறேன்”

“விவசாயிகள் தான் நமது நாட்டின் உயிரோட்டம். அவரகள் இல்லை என்றால் நாமும் இல்லை. எனது தந்தை யோகிராஜ் சிங் கூறிய கருத்துக்கள் காரணமாக நான் வருத்தம் அடைகிறேன். அவரது கருத்திற்கும் எனக்கும் எந்த சம்மதமும் இல்லை” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -