ஆன்லைனில் அரியர் தேர்வுகள் – பாரதியார் பல்கலை அறிவிப்பு!!

0
Online exams
Online exams

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இளங்கலை, முதுகலை கல்லுாரி மாணவர்களுக்கு 3, 5வது செமஸ்டர் மற்றும் அரியர் தேர்வுகளை, வரும், 23ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு செமஸ்டர் மற்றும் அரியர் தேர்வுகள்:

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டுவந்தன. இன்று கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன . இது தொடர்பாக நடப்பு ஆண்டு தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது, இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களும் நடப்பு ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதன்படி தேர்வுகள் அனைத்தையும் ஆன்லைனில் நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த கல்லுரிகளுக்கு வருகிற 23-ம் தேதி தமிழக உயர் கல்வி துறை வழிகாட்டுதலின்படி ஆன்லைனில் தேர்வு நடத்தவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

பல மாதங்கள் சம்பள பாக்கி – ஐபோன் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!!

இதுகுறித்து பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முருகன் கூறுகையில்,”தமிழக அரசு உயர் கல்வித்துறை வழிக்கட்டுதலின் படி, பாரதியார் பல்கலையின் கீழ் உள்ள இளங்கலை, முதுகலை கல்லுாரி மாணவர்களுக்கு 3, 5வது செமஸ்டர் மற்றும் அரியர் தேர்வுகளை, வரும், 23ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக மாணவர்கள் பதிவு செய்ய, பிரத்யேக ஆன்லைன் ‘போர்டல்’ உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் தேர்வு தாள்களை பதிவிறக்கியும், விடைத்தாள்களை பதிவேற்றவும் செய்து கொள்ளலாம். கொரோனா கால கட்டத்தில் நடத்தப்படும், தேர்வு விவரங்கள் பல்கலை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களின் முதல்வர், துறைத்தலைவர்களை தொடர்பு கொண்டு, கூடுதல் தகவல்களை பெற்று கொள்ளலாம்”.என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here