கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன பிரபல CSK வீரர் – சோகத்தில் ரசிகர்கள்!!

0

கிரிக்கெட் உலகத்தில் பிரபல சுழற்பந்து வீச்சாளராக வலம் வரும் ஹர்பஜன் சிங் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஹர்பஜன் சிங் ஓய்வு:

கடந்த 1998 ஆம் ஆண்டு, நடந்த ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு ஆதரவாக முதன் முதலாக கிரிக்கெட்டில் அறிமுகமாகி, கடந்த 2015 வரை தீவிரமாக விளையாடியவர் ஹர்பஜன் சிங். இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் இவர், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறாமல் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். கடந்த 2006 முதல் 2016 வரை டி20 கிரிக்கெட்டில் தீவிரமாக விளையாடினார். கடைசியாக இவர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2015ஆம் ஆண்டு விளையாடினார்.

41 வயதான இவர், தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், மிகச் சிறப்பாக விளையாடியுள்ள இவர், தனது வரலாற்றில் 103 டெஸ்ட் மேட்சில் விளையாடி, 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுமட்டுமில்லாமல் 236 ஒரு நாள் போட்டியில் விளையாடி 269 விக்கெட்டும் 28 டி20 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவரது விருப்ப ஓய்வு, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here