கமல் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விபத்து – சங்கரின் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பரிதாப பலி..!

0

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் நேற்று நடைபெற்ற கோர விபத்தில் சங்கரின் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

சண்டைக் காட்சியில் விபத்து..!

இந்தியன் 2 படப்பிடிப்பு நேற்று சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. அப்போது சண்டைக்காட்சி ஒன்றினை படமாக்கும் போது எதிர்பாராதவிதமாக கிரேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் சங்கரின் உதவி இயக்குனர் ஸ்ரீ கிருஷ்ணா உட்பட 3 பேர் உயிர் இழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று இரவு கமல்ஹாசன் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து தனது ஆறுதலைக் கூறினார். மேலும் தனது மூன்று சகாக்களை இழந்து நிற்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். இது தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

பிகில் ஷூட்டிங் விபத்து..!

நேற்று விபத்து நடந்த அதே இடத்தில பிகில் படப்பிடிப்பின் போதும் விபத்து நடந்ததாக நடிகை அம்ரிதா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். அங்கு யாரும் செல்ல வேண்டாம், அந்த இடம் நெகட்டிவ் வைப்ஸ் நிறைந்தது என அவர் தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here