93 வயதில் முதுநிலை பட்டம் பெற்ற வயதான இளைஞர்..! தளராத வயதிலும் தன்னம்பிக்கை..!

0

டெல்லியைச் சேர்ந்த சிவசுப்ரமணியன் என்ற நபர் தனது சிறுவயது ஆசையான முதுகலை பட்டம் பெறுவதை தனது 93 வயதில் படித்துப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

குடும்ப சூழ்நிலை காரணம்..!

1940ல் பள்ளிப்படிப்பை முடிந்த சிவசுப்ரமணியன் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது கல்லூரி படிப்பில் சேர முடியாமல் மத்திய அரசு அலுவலகத்தில் எழுத்தராக வேலைக்கு சேர்ந்தார். பின்பு அந்த அலுவகத்திலேயே இயக்குனர் ஆகவும் பதவி உயர்வு பெற்றார். ஆனால் தனது சிறுவயது ஆசையான கல்லூரியில் முதுநிலை பட்டம் பெற வேண்டும் என்பதை மறவாமல் இருந்தார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கு முதுநிலையில் பொதுநிர்வாகத் துறையில் பட்டம் பெற்றார். தன்னுடைய தளராத வயதிலும் படிப்பின் மீதுள்ள பிரியத்தால் படித்து பட்டம் பெற்ற சிவசுப்ரமணியன் இக்கால இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here