இன்னும் 6 மாதத்தில் கொரோனா 3அம் அலை – மத்திய அரசின் வல்லுநர் குழு தகவல்!!!

0

இந்தியாவில் இன்னும் 6 மாதத்தில் கொரோனா 3ஆம் அலை உருவாகலாம்  என்று மத்திய அரசின் வல்லுநர் குழு தகவல் தெரிவித்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா 3அம் அலை:

இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில்; தற்போது கொரோனா 3ஆம் அலை பற்றி தகவல் எழுந்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் கொரோனாவின் 3வது அலை இன்னும் 6 மாதத்தில் தொடங்கும் என மத்திய அரசின் வல்லுநர் குழு  கூறியுள்ளது.

இதை பற்றி கான்பூர் IIT பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தி வரும் பெருந்தொற்றின் 2வது அலை வரும் ஜூலை மாதம் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளனர். மத்திய அரசு மூன்று ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழு சூத்ரா (SUTRA – Susceptible, Undetected, Tested (positive) and Removed Approach) என்ற முறையின் அடிப்படையில் கொரோனா பரவல் குறித்த கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.

மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகக் குறைந்துள்ளது என்றும் மத்திய அரசின் வல்லுநர் குழு தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் வரும் மே 29-31 தேதிகளிலும், புதுச்சேரியில் 19-20 தேதிகளிலும் கொரோனா பரவல் அதிகமடையும் என்றும் கூறினார்கள். இதனை தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்கள், ஹிமச்சல் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் விரைவில் 2ஆம் அலை உச்சத்தைத் தொடும் என்று தெரிவித்தனர்.

இன்னும் 6 முதல் 8 மாதங்களில் நாட்டில் கொரோனா 3ஆம் அலை ஏற்படும், தற்போது மக்களுக்கு அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு  நோயெதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதாலும் கொரோனா 3ஆம் அலையின் பாதிப்பு பெரியளவில் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here