“பேஸ்புக் மற்றும் ட்விட்டரை எச்சரித்த சிங்கப்பூர்” – அப்படி என்ன நடந்தது???

0

சிங்கப்பூரின் கொரோனா வைரஸின் மாறுபாடுகளை குறித்து தவறான தகவல்களை பதிவிட்ட பேஸ்புக் மற்றும் ட்விட்டரை அதனை சரி செய்யுமாறு சிங்கப்பூர் அரசு எச்சரித்தது.

பேஸ்புக்கை மற்றும் ட்விட்டரை எச்சரித்த சிங்கப்பூர்:

சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம் பேஸ்புக் , ட்விட்டர்  மற்றும் எஸ்.பி.எச் பத்திரிகைகளுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தது, அதில் ” புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு நாட்டில் தோன்றியது என்பதைக் குறித்து  ஆன்லைனில் பதிவிட்ட பொய்யான தகவல்கள்; திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

சிங்கப்பூரில் COVID-19இன் ‘ புதிய மாறுபாடு’ குறித்த பொய்களை திருத்தம் செய்யுமாறு பேஸ்புக் மற்றும் ட்விட்டருக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரில் குறிப்பாக குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு புதிய வடிவ வைரஸ் இந்தியாவில் மூன்றாவது அலையாக வரக்கூடும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதை அடுத்து

சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் வந்துள்ளது. எனவே அதை திருத்தும் செய்யுமாறு சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டது. இந்த  திருத்த உத்தரவுகள் சிங்கப்பூரின் போலி செய்தி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here