உலகிலேயே குறைவான கொரோனா இறப்பு விகிதம் இந்தியாவில் தான் – சுகாதார அமைச்சகம்..!

0

ந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 48.07%-ஆக உள்ளது என சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 95,527 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 2.82 சதவீதமாக உள்ளது எனவும் கூறினார்.

இந்தியாவின் கொரோன விகிதம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,90,535 லிருந்து 1,98,706 ஆக அதிகரித்து உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 91,819 லிருந்து 95,527 ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,394 லிருந்து 5,598 ஆக அதிகரித்துஉள்ளது. கொரோனா பாதித்த 97,581 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்தநிலையில்,  மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

நாட்டின் மக்கள்தொகைக்கு ஏற்ப பாதிப்பு எண்ணிக்கை ஒப்பீடு செய்யப்பட வேண்டும். கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 73% பேர் மற்ற நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர்.இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 48.07 சதவீதமாக உள்ளது. இறப்பு விகிதம் உலகிலேயே மிக குறைவாக 2.82 சதவீதமாக உள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் மீட்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளை சரியான நேரத்தில் அடையாளம் காணுதல் மற்றும் முறையான சிகிச்சை காரணமாகவே இதனை எங்களால் அடைய முடிந்தது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here