மாநிலங்களின் கையிருப்பில் எவ்வளவு தடுப்பூசி உள்ளது? மத்திய அரசு விளக்கம்!

0

நாட்டில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மாநிலங்களின் கையிருப்பில் எவ்வளவு தடுப்பூசி உள்ளது என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி:

இந்தியாவில் கடந்த ஜனவரி 2021, முதல் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் அடுத்து 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மாநில/யூனியன் பிரதேசங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரமாக நாடைபெற்று வருகிறது.

மேலும் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. அதில் 25% தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசிகள் எவ்வளவு கையிருப்பில் உள்ளது என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

கொரோனா வைரஸுடன் வாழ பழகிக்கோங்க – பிரதமர் திடுக்கிடும் அறிக்கை!

அதன்படி தற்போது வரை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுக்கு மத்திய அரசு 36,97,70,980 டோஸ் தடுப்பூசிகள் வழங்கியுள்ளது. அதில் 34,95,74,408 டோஸ் தடுப்பூசிகள் தற்போது வரை பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தற்போதைய நிலவரப்படி மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கையிருப்பில் 2,01,96,572 டோஸ் தடுப்பூசிகள் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here