MS தோனியின் 11 வது ஆண்டு திருமண நாள்.. மனைவிக்கு என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா??

0

தங்களது 11 வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, MS தோனி தனது மனைவி சாக்ஷிக்கு அழகான விண்டேஜ் கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் MS தோனி, சாக்ஷி தம்பதி தங்களது 11 ஆம் திருமண நாளை ஜூலை 4 ஆம் தேதி கொண்டாடினர். தோனியின் ரசிகர்கள், சக கிரிக்கெட் வீரர்கள், சினிமா துறையினர் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை அந்த தம்பதிக்கு சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் தெரிவித்தனர்.

2010 ஆம் ஆண்டு தோனி சாக்ஷியை திருமணம் செய்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டு தோனிக்கும் சாக்ஷிக்கும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு Ziva என்று பெயர் சூட்டினர். இந்த குழந்தையின் குறும்பு தனத்திற்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது MS தோனி தனது திருமண நாளையொட்டி ஒரு விண்டேஜ் காரை மனைவிக்கு பரிசளித்துள்ளார்.

மனைவி சாக்ஷி, தோனியின் இந்த பரிசுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் இந்த காரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here