Monday, May 6, 2024

கொரோனா தடுப்பூசி மருந்தின் விலை ரூ 1,000 – அதார் பூனவல்லா அதிரடி அறிவிப்பு!!

Must Read

கொரோனா தடுப்பூசி மருந்தின் விலை 1000 ரூபாய்க்கு விற்கப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவன தலைமை அதிகாரி அதார் பூனவல்லா நேற்று அறிவித்தார். இதனை ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் உருவாக்கியுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுமக்களுக்கு கிடைக்கும் என சீரம் நிறுவனத்தின் சிஇஓ அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழம், அஸ்டிரஜெனிகா மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. உலகம் முழுவதும் இம்மருந்தின் இறுதிகட்ட பரிசோதனை நடந்து வருகிறது.

இந்த தடுப்பூசி குறித்து, சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா, நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியானது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கும் வயதானவர்களுக்கும் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து, ஏப்ரலில் பொதுமக்களின் தேவைக்காக விற்பனைக்கு வரும். இந்திய ரூபாய் மதிப்பில் 2 டோஸ்கள் விலை ரூ.1000க்கு விற்கப்படலாம். அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பு மருந்து கிடைக்க, மூன்று ஆண்டுகள் வரை ஆகும். 2024 ஆம் ஆண்டு தான் அனைவருக்கும் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த தடுப்பூசி மருந்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக, எந்த புகார்களும் இதுவரை எழவில்லை. இந்தியாவில் செய்யப் பட்ட பரிசோதனைகளின் முடிவுகள், ஒன்றரை மாதங்களில் கிடைத்துவிடும். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் அவசரம் காட்ட வேண்டிய அவசியமில்லை. இன்னும் பலகட்ட ஆய்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கலாம் என்று சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -