‘கொரோனா தடுப்பூசிக்கான முன்னோட்டம் ஜனவரி 8 இல் ஆரம்பமாகும்’ – ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!!

0

தமிழகம் முழுவதற்குமான கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் வரும் ஜனவரி 8ம் தேதியன்று அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன. அதன்படி கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் என்ற பெயரில் நாட்டின் சில பகுதிகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இதை தொடர்ந்து தமிழகத்திலும் வரும் 8 ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுமென்று தமிழக சுகாதாரதுறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துளார்.

பெரிய மேட்டில் உள்ள மத்திய சுகாதார அமைச்சகத்தின் மெடிக்கல் ஸ்டோர்களை ஆய்வு செய்ய வந்த ராதாகிருஷ்ணன் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, “தடுப்பூசி மையங்களில், பணிகள் நடைபெற வசதியான சூழலை உருவாக்குவதும், களப்பணியாளர்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் CO-WIN செயலியை உபயோகப்படுத்துவதை எளிதாக்குவதும், இணைய சேவையை பயன்படுத்துவதில் அவர்களின் திறன்களை சரிபார்ப்பதும் இந்த பயிற்சியின் நோக்கமாகும்.மேலும் தினசரி இலக்கை எட்டுவதற்கு தேவையான இடத்தையும் நேரத்தையும் ஊழியர்கள் உறுதி செய்வதோடு பாதகமான விளைவுகளை கண்காணிக்க அவர்கள் ஒரு தனி அமைப்பினை உருவாக்குவார்கள்” என்று தெரிவித்தார்.

‘எனது கட்சி ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கணினி வழங்கப்படும்’ – கமல் வாக்குறுதி!!

மேலும் அவர் “இது போன்ற ஒரு முன்னூட்டத்தை ஏற்கனவே ஜனவரி 2ம் தேதியன்று 5மாவட்டங்களை சேர்ந்த 17 இடங்களில் அரசு நடத்தியுள்ளது. இன்னும் சில தினங்களில் நாங்கள் கொரோனா தடுப்பூசியை மக்களிடம் கொண்டு செல்வதற்கும், அதற்கு தேவையான பயிற்சிகளை ஊழியர்களுக்கு வழங்கி தயார் நிலையில் வைப்பதற்குமான உத்திரவாதத்தை அளிக்கிறோம். இந்த முன்னோட்டம் எங்களுக்கு தேவையான நம்பிக்கையை வழங்கியுள்ளது.

மேலும் கடந்த வியாழனன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும் மாநில சுகாதார அமைச்சர்களுக்கும் இடையில் நடத்த சந்திப்பில் கொரோனா தடுப்பூசி சம்பந்தமான பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது” எனவும் தெரிவித்தார். இது பற்றி கருத்து தெரிவித்த பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் “இந்த தடுப்பூசி தொடர்பாக மக்களிடையேயும், சுகாதார பணியாளர்களிடையேயும் நிலவும் அனைத்து தயக்கங்களையும் தகர்ப்பதற்கு அனைத்து விதமான தகவல்களும் முன்னதாகவே அனைத்து மையங்களுக்கும் வழங்கப்படும்” என்று கூறினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அவர் “முதற்கட்டமாக இந்த தடுப்பூசியானது பொது மற்றும் தனியார் துறையை சேர்ந்த 6 லட்சம் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 47ஆயிரம் சுகாதார மையங்களும், சுகாதாரத்துறை ஊழியர்களின் பாதுகாப்பிற்காக 3,000 மையங்களும் தயார் நிலையில் வைக்கப்படும். ஒவ்வொரு மையத்திலும் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 100 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும்” என்று கூறினார்.

corona vaccine
corona vaccine

தொடர்ந்து பேசிய அவர், “மத்திய அரசு இந்த தடுப்பூசி மருந்தினை மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. தமிழகத்தை பொருத்தவரை சென்னை நமக்கு தலைமையிடமாக செயல்படுவதில் நன்மை இருக்கிறது. அங்கிருந்து தெற்கு பகுதி முழுவதற்கும் இரண்டு நடமாடும் குளிரூட்டப்பட்ட வாகனங்களின் மூலம் சுமார் 2 கோடி டோஸ் மருந்துகளை கொண்டு செல்ல முடியும். மருந்து ஏற்றப்படும் போதும், வழங்கப்படும் போதும் அதனுடைய குளிர்நிலை கண்காணிக்கப்படும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் 2.5 கோடி தடுப்பு மருந்து அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 33 லட்சம் சிரிஞ்சுகள் அனுமதிக்கப்பட்டு நமக்கு தற்போது 28 லட்சம் சிரிஞ்சுகள் வந்து சேர்ந்துள்ளன. அவற்றை மாநிலம் முழுவதுமுள்ள பாதுகாப்பு கிடங்குகளுக்கு அனுப்பி பத்திரப்படுத்தியுள்ளோம். மாவட்டங்களின் தேவைகளை பொறுத்து அவை அனுப்பி வைக்கப்படும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here