கொரோனா இரண்டாம் அலைக்கு 646 மருத்துவர்கள் பலி….இந்திய மருத்துவ சங்கம் தகவல்!!!

0

நாடு எங்கும் கொரோனாவின் இரண்டாம் அலை பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசும் பெரும் முயற்சி எடுத்து வருகிறது இருப்பினும் அதன் வீரியத்தை குறைக்க இன்னும் போராடிக்கொண்டு இருக்கிறோம். இந்நிலையில்  கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக 646 மருத்துவர்கள் இறந்து உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் (IMA) தெரிவித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வாழும் கடவுள்களாக உள்ள மருத்துவர்கள் கொரோனா ஒழிப்பில் மாபெரும்  பங்கு  வகிக்கின்றனர். தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது அடுத்தவர்களின் உயிரை இந்த இக்கட்டான சூழ்நிலையில் காத்து வருகின்றனர். ஐ.எம்.ஏ அளித்த தகவலின் படி இதுவரை கொரோனாவின் இரண்டாம் அலைக்கு 646 மருத்துவர்கள் தங்கள் உயிரை பறிகொடுத்ததாக கூறியுள்ளது.

அந்த அறிக்கைபடி  டெல்லியில் அதிகபட்சமாக 109, பீகார் 97, உத்தரபிரதேசம் 79, ராஜஸ்தான் 43, ஜார்கண்ட் 39, குஜராத் 37, ஆந்திரா 35, தெலுங்கானா 34, மற்றும் மேற்கு வங்கம் 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும்  மகாராஷ்டிராவில் இரண்டாவது அலையின் போது 23 மருத்துவர்கள் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.மேலும் முதல் அலையின் தாக்கத்தால் உயிர் இழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 748 என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here