துவங்கியது தமிழகத்தில் பருவ மழை – 10 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் என அறிவிப்பு

0

பருவ மாற்றங்களை தொடர்ந்து தமிழகத்தில் பருவ மழை பொழிய துவங்கியுள்ளது. தமிழகதில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

பருவ மழை:

05.06.2021 விருதுநகர்‌, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருச்சராப்பள்ளி, சேலம்‌, நாமக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌,ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ மிதமான மழையும்‌, சில வட உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மலை பெய்யும் என கூறப்பட்ட நிலையில் மீனவர்கள்‌ (4.06.2021 – 9.06.2021) தேதிகளில்‌ கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது. தென்‌ மேற்கு பருவமழை இன்று தமிழ்நாட்டின்‌ பெரும்பாலான இடங்களில் துவங்கிய நிலையில் ஆங்காங்கே மலை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here