இந்தியாவில் புதிதாக 35,178 பேருக்கு கொரோனா.. 440 பேர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்!!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,178 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 440 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனா தொற்று இன்னும் நம்மைவிட்டு முழுமையாக நீங்கிவிடவில்லை. உலக நாடுகளும் அதற்கேற்ப நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி கொண்டு தான் உள்ளன. அதுவும் மூன்றாம் அலை அச்சறுத்தல் வேறு மக்களை நடுங்கவைத்து உள்ளது.

கொரோனா முதல் அலையில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பெரிய பாதிப்புகள் இல்லை. ஆனால் இரண்டாம் அலையில் மோசமாக பாதிப்பிற்கு உள்ளான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதற்கு காரணம் இந்தியாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ்.

 

இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் புதிதாக 35,178 பேருக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,22,85,857 ஆக உயர்ந்தது. புதிதாக உயிர் இழந்தோர் எண்ணிக்கை 440 ஆக பதிவாகியுள்ளது. இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,32,519 ஆக உயர்ந்தது.தற்போது வரை இத்தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,14,85,923 ஆக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here