வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. 31 நாட்களுக்கு பின் குறைந்த டீசல் விலை!!

0

மக்களின் அன்றாட தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் நிர்ணயிக்கின்றன. அதன் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

2021 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. இதனால் நடுத்தர மக்களுக்கு பெரும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

சமீபத்தில் கூட தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் பெட்ரோலின் விலை ரூ.3 க்கு குறைக்கப்பட்டது. இதனால் தமிழக மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். ஆனால் டீசல்லின் விலையில் எந்த மாற்றமும் பட்ஜெட் தாக்கலின் போது செய்யப்படவில்லை.

அவ்வாறு இருக்க இன்று சென்னையில் 31 நாட்களுக்கு பின்னர் இன்று டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ. 94.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு ரூ 99.47-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here