கொரோனவால் மருத்துவர்கள் இறந்தால் ரூ. 50 லட்சம் நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி – முதல்வரின் அறிவிப்புகள்

0

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை 1596 பேர் பாதிக்கப்பட்டும், 19 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ள மருத்துவர்களும், ஊழியர்களும் வைரஸ் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது.

கொரோனா இறப்பு நிதி:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ள அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறையைச் சார்ந்த பணியாளர்கள், காவல்துறை மற்றும் பிற அரசுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டால் முழு செலவு, உயிரிழந்தால் 10 லட்ச ரூபாய் நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டு 50 லட்ச ரூபாய் நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும். மேலும் தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ள தனியார் மருத்துவமனை செவிலியர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் என அனைவர்க்கும் தமிழக அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here