குட் நியூஸ்…! 24 மாநிலங்களில் ஒரு வாரமாக குறையும் கொரோனா பாதிப்பு – சுகாதார அமைச்சகம் தகவல்!!!

0
illustration and painting

இந்தியாவில் 24 மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உலகம் முழுவதும் கோவிட்-19 இரண்டாம் அலையின் தாக்கம் பல நாடுகளை ஆட்டி படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பரவல் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதிகரிப்பதும், குறைவதுமாக வைரஸ் எண்ணிக்கை தொடர்ந்து வித்தை காட்டி வருகிறது. நமது இந்தியாவையும் இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை.

ஒருவரைப் பாதுகாக்கவும் மற்றும் நோய் பரவலை கட்டுப்படுத்தவும் கோவிட் 19 தடுப்பூசிகள் இன்றியமையாதது என்பதை உணர்ந்த உலக நாடுகள் தடுப்பூசியின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பின. தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை முழு வீச்சில் செயல்படுத்த தொடங்கின. இந்தியாவும் கடந்த 130 நாட்களில் 20 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்தது. இது ஒருபுறம் நடக்க ஊரடங்கு விதிகளும் கடுமையாக்கப்பட்டன.

இவ்வாறு தொடர்ந்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, தற்போது 24 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது. மேலும் குணமடைவோர் விகிதம் 90.01% ஆக அதிகரித்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here