சமூக வலைத்தளங்களின் புதிய விதிமுறை – சுந்தர் பிச்சை வெளியிட அறிக்கை !!!

0

சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் ஒடிடி தளங்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வந்தவண்ணமுள்ளது. இது குறித்து தமிழகத்தின் பெருமை எனும் அடையாளம் கொண்ட கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை :

கேட்கும் கேள்விகளுக்கு தெளிவாகவும் விளக்கமாகவும் பதில் அளிப்பதில் வல்லவர் சுந்தர் பிச்சை. தமிழகத்தை சேர்ந்த இவர் உலக நாடுகளை ஆளும் கூகுள் சிஇஒ என்ற பொறுப்பில் உள்ளவர். தற்போது சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் ஒடிடி தளங்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இதுகுறித்து “எங்களின் உள்ளூர் அதிகாரிகள் கூகுள் இயங்கி வரும் ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டின் உள்ளூர் விதிகளுக்கு உட்பட்டு அவற்றுக்கு மதிப்பு அளிப்போம். அரசு கோரிக்கைகளை ஏற்கும் விவகாரங்கள் குறித்து எங்களிடம் வெளிப்படையான அறிக்கைகள் உள்ளன. அவற்றை நாங்கள் சம்மந்தப்பட்ட அறிக்கைகளில் குறிப்பிடுவோம்,” என சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் கூகுள் உள்ளூர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, அரசாங்கங்கள் உடன் இணைந்து பொறுப்பான முறையில் நடைபெறுகிறது என கூறிய அவர் “நிறுவனம் என்ற முறையில், சுதந்திரம் மற்றும் வெளிப்படையான இணைய சேவை மற்றும் அது வழங்கும் பலன்களுக்கு மதிப்பளிக்கிறோம். உலகம் முழுக்க ஒழுங்குமுறை ஆணையங்களுடன் இணைந்து பொறுப்பான முறையில் செயல்பட்டு வருகிறோம்,” எனவும் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here