இது வேற லெவல் தான்.. தனுஷின் ஜகமே தந்திரம் படம் பற்றி பிரபல ஹாலிவுட் நடிகர் போட்ட நச் ட்விட்!!!

0

தனுஷ் நடிப்பில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம் தேதி வெளியாகும் படம், ஜகமே தந்திரம். இந்த திரைப்படத்தில் பணியாற்றியது குறித்து ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ட்விட்டரில் செம ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தை இயக்கியுள்ளது கார்த்திக் சுப்புராஜ். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

அதிரடி படமாக உருவாகும் இப்படத்தினை கதை ஆசிரியராக தனுஷ் பணியாற்றியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக நெட்பிளிக்சில் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் சுருளி என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியது.

தற்போது இப்படத்தில் பணியாற்றியது குறித்து ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, “ஜகமே தந்திரம் படக்குழுவுடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. மேலும் இந்தியாவில் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டது மிக மகிழ்ச்சியாக இருந்தது, இந்தியா மிக அருமையான நாடு. உங்களோடு பணியாற்றியதில் நான் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன்” என ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here