மீண்டும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மீண்டும் விஜய் டிவியில் வரவுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

குக் வித் கோமாளி

வித்தியாசமான கான்செப்டில் ஆரம்பிக்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். பலருக்கும் வாழ்க்கை கொடுத்ததும் இந்த செட் தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ரம்யா பாண்டியன் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நிலைத்திருக்கிறார் என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் தான். முதல் சீசனை விட இரண்டாவது சீசன் சக்கை போடு போட்டது. அஸ்வின் தான் இந்த சீசனில் மக்கள் மனதை கொள்ளைகொண்டவர். பல பெண்களின் கனவு நாயகன்.

ஏனெனில் இவ்வளவு அழகு, அதே நேரத்தில் பொறுமை, மேலும் சமைக்க வேறு தெரிந்து வைத்திருக்கிறார். இது போதாதா?? பெண்களின் கனவு நாயகனாக இருக்க?? இப்படி இந்த ஷோ வேற லெவெலில் பிரபலமானது. இந்த சீசன் முடிந்ததும் பலரும் கண்கலங்கினர்.

அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு கவுன்சிலிங் !!!

இன்னும் 1 வருடம் வரை காத்திருக்க வேண்டுமா?? என்று புலம்பிக்கொண்டிருந்தனர். இவர்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் குக் வித் கோமாளி மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. அதாவது சனிக்கிழமை மாலை 6.30 மணியிலிருந்து 9.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. இதனை கேட்ட பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here