முதன்முறையாக மகள்களுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்ட குக் வித் கோமாளி பிரபலம் – யார் தெரியுமா??

0

குக் வித் கோமாளி சீசன் 2 வின் டைட்டில் வின்னராகிய கனி முதன்முதலாக தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படங்கள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவராலும் விரும்பப்பட்ட ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் சனி,ஞாயிற்று கிழமைக்காக தவம் கிடப்பவர்களும் அதிகம். இந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி மீது மக்களுக்கு அதிக நாட்டம் இருந்தது. கோமாளிகளான புகழ், ஷிவாங்கி, பாலா மற்றும் மணிமேகலை என பலரும் தங்களது சேட்டைகளால் மக்களை சிரிக்க வைத்து வருகின்றனர்.

இவர்களை எல்லாம் ஓரங்கட்டியவர் தான் சுனிதா தனது அழகிய தமிழால் ரசிகர்களை கவர்ந்தவர். ஷிவாங்கிக்கே டஃப் கொடுத்தவர் சுனிதா. இப்படி பல கோமாளிகளை வைத்து சமாளித்து முதல் பரிசை தட்டி சென்றவர் தான் கனி. புது விதமான சமையலில் மக்களை கொள்ளை கொண்டவர். கனி என்று சொல்வதை விட காரக்குழம்பு கனி என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டு உணவிலேயே புதுமையாக செய்வதில் கைதேர்ந்தவர்.

அப்படி புதுமையான டிஷ் செய்து தான் இறுதி சுற்றில் அசத்தினார். வனிதாவை விட ஒரு படி மேல் என்று பெயர் வாங்கினார். இத்தனை நாட்கள் அவர் தனது புகைப்படத்தை மட்டுமே இன்ஸ்டாவில் வெளியிட்டு வந்தார். அப்படி இருக்க தற்போது தனது 2 குழந்தைகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here