குக் வித் கோமாளி அஸ்வினுடன் இருக்கும் பிக் பாஸ் பிரபலத்தின் மகள் – வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற அஸ்வின் சாண்டி மகள் லாலாவுடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி அஸ்வின்

விஜய் டிவி எப்பொழுதுமே பல புதிய கான்செப்டில் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவார்கள். அதனால் தான் தற்போது வரை விஜய் டிவிக்கு தனி மவுசு உள்ளது என்றே சொல்லலாம். அதன் படி உருவாக்கப்பட்டது தான் குக் வித் கோமாளி.

இது பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் விருப்பமான நிகழ்ச்சியாக உள்ளது. மேலும் பல நடிகர்களை பிரபலமாக்கியுள்ளது. சீசன் 1இல் வனிதா, ரம்யா பாண்டியன் மற்றும் ரேகா போன்றோர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். இந்த சீசன் போன சீசனை விட பிரபலமடைந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த 2வது சீசனில் அஸ்வின் பட்டித்தொட்டியெல்லாம் பிரபலமானார். இதுவரையில் அஸ்வின் பல ஷார்ட் பிலிம்ஸ், படங்கள் நடித்திருந்தாலும் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது என்னவோ குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சில தினங்களுக்குளேயே அவருக்கு 1 மில்லியன் பாலோவர்ஸ் கிடைத்தனர்.

அதனை செட்டிலேயே வைத்து கேக் கட் செய்து கொண்டாடினர். தற்போது குட்டி பட்டாஸ் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் தான் நடன இயக்குனர். தற்போது அஸ்வின் அவர் லாலாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. லாலா இப்படி பெரிய மனுஷி ஆகிட்டீங்களா?? என பலரும் கமன்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here