ப்பா., வேற லெவல்! பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் குக் வித் கோமாளி பிரபலம் – குவியும் வாழ்த்து!!

0
ப்பா., வேற லெவல்! பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் குக் வித் கோமாளி பிரபலம் - குவியும் வாழ்த்து!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் 2ம் இடம் பிடித்த தர்ஷன், பாலிவுட் நடிகர் அமீர் கானை நேரில் சந்தித்த போட்டோ இன்ஸ்டாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ:

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 3 சீசன், தற்போது நடந்து முடிந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த 3 வது சீசனில் ஸ்ருதிஹா முதலிடத்தையும், தர்ஷன் 2 ம் இடத்தையும் , அம்மு அபிராமி 3 ம் இடத்தையும் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில், இரண்டாம் பரிசு பெற்ற தர்ஷன் வெள்ளி திரையில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த கனா  திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது, தர்ஷனுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் இவர் அண்மையில்,  பாலிவுட் நடிகர் அமீர் கானை சந்தித்துள்ளார்.

இது குறித்த போட்டோக்கள் அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியானது. இதை பார்த்த நெட்டிசன்கள், தர்ஷன் அடுத்த கட்டமாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கப் போகிறார் என கமெண்ட் செய்தனர். ஆனால், இந்த சந்திப்பு எதற்காக நிகழ்ந்தது என்பதை, தர்ஷன் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Darshan (@darshan_offl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here