இயக்குனர் அட்லிக்கு செக் வைத்த முக்கிய பிரபலம்., என்ன உங்க நிலைமை கடைசியில இப்படி ஆயிடுச்சு!!

0
இயக்குனர் அட்லிக்கு செக் வைத்த முக்கிய பிரபலம்., என்ன உங்க நிலைமை கடைசியில இப்படி ஆயிடுச்சு!!
இயக்குனர் அட்லிக்கு செக் வைத்த முக்கிய பிரபலம்., என்ன உங்க நிலைமை கடைசியில இப்படி ஆயிடுச்சு!!

தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் அட்லிக்கு பாலிவுட்டில் தான் இயக்கிய படத்தின் நடிகரால் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகியுள்ளார்.

இயக்குனர் அட்லி

கோலிவுட் திரையுலகில் ஹிட் பட இயக்குனராக குறுகிய காலத்தில் வளர்ந்தவர் இயக்குனர் அட்லி. “தளபதி தான் என் தலைவன்” என வரிசையாக நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹிட் படங்களை இயக்கி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். இதையடுத்து கோலிவுட் தாண்டி தற்போது பாலிவுட்டில் ஷாருக் கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்த ஷாருக்கான் மூன்று வருடங்களுக்கு பிறகு மார்க்கெட்டை உயர்த்த ஜவான் மற்றும் பதான் படங்களில் நடித்து வருகிறார். ஜனவரி 25ம் தேதி வெளிவர உள்ள பதான் பட வெளியீட்டு நிகழ்ச்சியில் “பேசரம் ரங்” பாடலை, படக்குழுவினர் அதிரடியாக வெளியிட்டனர். இந்த பாட்டில் நடிகை தீபிகா படுகோன் ஷாருக்கானுடன் காவி நிற அந்தரங்க உடையில் நடனமாடி இருப்பார்.

மதுரை வாகன ஓட்டிகளே., நாளை இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம்! மறக்காம இதைப் பாருங்க!!

இதனால் அயோத்தி மடத்தலைவர், மத்திய பிரதேச அமைச்சர் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் இந்து மதத்தை அவமதிப்பது போல் இந்த காட்சியை படக்குழுவினர் அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் “சமூக ஊடகங்களின் பார்வை மற்றும் சினிமா மீதான நேர்மறை விமர்சனங்கள் தொடர்ந்து வளர வேண்டும்” என நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார். ஷாருக்கான், இப்போது தன் படைத்தால் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை, முடிச்சிட்டு ஜவான் படத்துக்கு எப்போது திரும்புவார் என இயக்குனர் அட்லி காத்துக்கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here